Sunday, June 27, 2010

தியானம் என்பது என்ன? 2

123 இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்வது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!

நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது. கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது. உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம். இந்த உலகத்திலையே இருப்போம். ஆனால்; நடைபெறும் அனைத்தையும் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு அழாகான விளையாட்டாக ... மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்வோம். விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம், நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.

நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர. மனிதர் இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்து கொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம். மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது. ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின், பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார். இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள் படகுகள் போல ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே தியான நிலையை அடைவதற்கான பேரின்பத்தை அனுபவிப்பதற்கான ஒரு ஊடகம். ஒரு பாதை. மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் இவர் வழிகாட்டும் பாதை இது. தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.

ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    ReplyDelete
  3. Emperor Casino Review - How To Play and Claim Your
    Emperor 바카라사이트 Casino offers a great variety of games. Play all of your favourite casino games at the best gambling site in 제왕카지노 Canada. Rating: 8.8/10 · ‎Review หารายได้เสริม by Shootercasino

    ReplyDelete